திறமான கொங்கணர் போல் ஆருமில்லை
செகத்திலே இப்படித்தான் உண்டோபிள்ளை
உறமான செய்திஎல்லாம் பார்த்து வந்தார்
ஒவ்வொரு நாளாக யிருக்க முத்தி
அறமான தவஞ்செய்தார் சட்டமுனி மெய்க்க
அவர்பிதா போகர்மெய்க்க காலாங்கி மெய்க்க
திறமான திருமூலத்தேவர் மெய்க்க
நித்திரைப்போல் மூன்று கற்பஞ் சமாதிகாணே.
மகான் அகத்திய மகரிஷி அருளிய கவியின் சாரம்
சித்தர்களிலே உருகி தியானிப்பவர்கள் ஒருசிலரே. அந்த சிலரில் கொங்கண மகரிஷியே உருகி தியானிப்பதில் மிக வல்லவர் ஆவார். உருகி தியானிக்க தியானிக்கத்தான் பாவங்கள் நீங்கும், புண்ணியம் பெருகும், சிறப்பறிவு உண்டாகும்.
சிறப்பறிவினால்தான் உடம்பை பற்றி அறிகின்ற அறிவு வரும். உடம்பு என்று சொல்லப்பட்டது தூலமும் (நரகம்), சூட்சுமமும்(சொர்க்கம்) பொருந்தியதாகும். தூல தேகத்தின் துணை கொண்டுதான் சூட்சும தேகத்தை ஆக்கம்பெற செய்ய முடியும் என்பதை ஆசான் கொங்கணமகரிஷி நெக்குருக பூஜை செய்ததால் தெரிந்து கொண்டார். அவருடைய பூஜைக்கு இறங்கி அருள் செய்யாத ஞானிகளே இல்லை என்று சொல்லலாம்.புஜண்ட மகரிஷி, சட்டை முனி, போகர், காலாங்கிநாதர், திருமூலர், நந்தீசர், ஞானபண்டிதரான சுப்ரமணியர், கோரக்கர், பிருகு மகரிஷி, பிரம்ம முனிவர், தன்வந்திரி, சிவயோகமாமுனி, ரோமரிஷி, வியாக்ரமர், பதஞ்சலியார் போன்ற மகான்களும் ஆசான் கொங்கண மகரிஷியை மகிழ்ந்து ஆசி தந்துள்ளார்கள்.
ஆகவே கொங்கண மகரிஷியை தினமும் "ஓம் கொங்கணேஷ்வராய நம" என்று நாமஜெபம் செய்தால் ஒன்பது கோடி சித்தர்களும் உனக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டும்? என்று கேட்டு வேண்டிய அனைத்தும் நமக்கு தருவார்கள். மேலும், நாம் செய்த பாவங்களையும் நீக்குவார்கள். ஞானமும் தருவார்கள், மரணமிலா பெருவாழ்வும் தருவார்கள். ஆசான் கொங்கண மகரி~pயை பூஜிப்போம்! ஆசிபெற்று வாழ்வோம்!!.
குறிப்பு-1 :
நித்திரை போல் மூன்று கற்பம் என்பது சம்பை சரக்காகிய மூலிகைகள். அதாவது சிவகரந்தை, சத்தி சாரணி வேர், வல்லாரை சூரணம் ஆகிய இவைகளே முதல் கற்பமாகும். அடுத்து பச்சரிசி, பாசிப்பயறு, பசும்பால், பசு நெய், பழங்கள், சர்க்கரை இவை இரண்டாம் கற்பமாகும். மூலக்கனல் தோன்றுவதால் உச்சிக்கு கீழ், உண்ணாவிற்கு மேல் அமிழ்தபானம் சிந்தும். இது மூன்றாவது கற்பமாகும்.இந்த மூன்றும் ஆசான் ஆசியில்லாமல் அணு அளவும் சித்திக்காது. ஆசான் சொல்லாமல் நாமாக மூலிகைகளையும், வேர்களையும், உப்பில்லா உணவுகளையும், வேறு வேறு வகையான கற்பங்களையும் உண்டால் நோய்தான் வருமே தவிர சித்தி பெற முடியாது. ஆகவே கொங்கண மகரிஷி துன்பமில்லாமல் இந்த மூவகை கற்பங்களையும் அறிந்து சமாதியாகிய ஞானசித்தியை பெற்றார். எனவே ஆசான் கொங்கண மகரிஷியை பூஜித்து ஞானம் பெறுவோம்!.
குறிப்பு-2 :
கொங்கண மகரிஷியை பூஜித்தால், இறை வழிபாடு என்ற பெயரில் ஆடு, கோழி, பன்றி, கடா இவைகளைக் கொல்லுவதால் பாவம்தான் சூழுமே தவிர வேறு எந்தவித பயனும் ஏற்படாது என்பதை உணரலாம். அலகு குத்திக்கொள்ளுதல், அங்கம் புரளுதல், பால் குடம் எடுத்தல். முடி எடுத்தல், காவடி எடுத்தல், புனித நீராடுதல் போன்ற சடங்குகள் எல்லாம் மனமகிழ்ச்சியை உண்டுபண்ணுமே தவிர பிறவிப் பிணிக்கு மருந்தாகாது என்பது பெரியோர் கருத்து. பிறவிப் பிணியை நீக்கவேண்டும் என்றால் ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றி வைப்பதாலும், மனைவி மக்;கள் சார்ந்தவர்கள் இவர்களிடம் பக்குமாக நடந்துகொள்ளுவதாலும் மேலும் வேலையாட்கள் நண்பர்கள் இவர்களை மதித்து நடப்பதாலும், விருந்தை உபசரிப்பதாலும், புலால் உணவை மறுத்தலும், திருமந்திரம், திருவருட்பா, திருக்குறள், திருவாசகம் போன்ற அறநூல்களைப் படிப்பதலும், ஞானிகளை தினம் பூஜை செய்தலும் ஆகியவைகளே பிறவிப்பிணியை நீக்கி, மோட்ச லாபம் தரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக